Monday, October 21, 2019

மட்டக்களப்பில் சிறைக்கைதி தப்பி ஓட்டம்...!



மட்டக்களப்பு சிறையில் சிறைத்தண்டனை பெற்றுவந்த சிறைக்கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் காலை  மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வேலைக்காக கைதிகளை கொண்டுசென்ற வேளையில் குறித்த கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிறிய குற்றமொன்றிற்காக 3 மாதகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவந்த இவர் அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் இஸ்மையில் என பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:
Write comments