Wednesday, October 30, 2019

விவாதத்திற்கு தயார் - சஜித்துக்கு சவால் விடுக்கும் நாமல்


ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ விடுத்த சவாலை ஏற்று,  விவாதத்திற்கு வருவதற்கு தாம் தயாராகவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தும்மலசூரிய பகுதியில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு பகிரங்க விவாதத்திற்கு வருகை தருமாறு, கோட்டாபய ராஜபக்ஸவுக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், கோட்டாபய ராஜபக்ஸ அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவரது குடும்பத்துடன் விவாதத்தில் ஈடுபடவும், தாம் தயார் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, ராஜபக்ஸ குடும்பத்தில், தாம் ஓர் இளம் அரசியல்வாதி என்ற வகையிலும், பிரேமதாஸ குடும்பத்தில் சஜித் பிரேமதாஸ ஓர் இளம் அரசியல்வாதி என்ற வகையிலும், விவாத்தில் பங்கெடுப்பதற்கு வருகை தர தாம் தயார் என நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவை விவாதத்திற்கு அழைக்க முன்னர், தம்முடன் விவாத்திற்கு வருகை தருமாறு, சஜித் பிரேமதாஸவினை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments:
Write comments