Monday, October 28, 2019

கோட்டாபய தொடர்பில் சர்ச்சைப் பேச்சு? ஏ.எச்.எம். பௌசிக்குஏற்பட்ட நிலை!


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஏ.எச்.எம். பெளஸி ஆற்றி உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போதே பெளஸி மக்களை குழப்பும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உரையாற்றியிருந்தார்.

இந் நிலையில், விசாரணைகளுக்காக குறித்த தினம் பெளஸி எம்.பி. ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத ஒளிப்பதிவை, கிராண்பாஸ் பொலிஸாருக்கு ஒப்படைக்குமாறு அந்த நிகழ்வைல் பங்கேற்ற இலத்திரணியல் ஊடகங்களுக்கு இதன்போது கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா உத்தரவிட்டார்.

No comments:
Write comments