Saturday, October 26, 2019

இறக்காமத்தில் கொண்டாடப்பட்ட உலக சிறுவர் மற்றும் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தின விசேட நிகழ்வு


இறக்காமம் பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவும் சமூக சேவை பிரிவும்  இணைந்து ஏற்பாடு செய்த  உலக சிறுவர் மற்றும் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தின விசேட நிகழ்வு 2019.10.26 ஆம் திகதி நேற்று சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் இறக்காமம் காலாச்சார நிலையத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இறக்காமம் பிரதேச செயலாளர் அல் ஹாஜ் M.M. நஸீர் தலைமையில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச  செயலாளர்  திருமதி  F. நஹீஜா முஸப்பீர் கணக்காளர் திருமதி A.L றிம்ஷியா அர்சாட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் K.L ஹம்ஸார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றதுடன் விசேட சொற்பொழிவாளராக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க்  A. நளீம் கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வல் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரீட்சை பரீட்சையில் இறக்காமம் கோட்டத்திற்கு உற்பட்ட பாடசாலைகளில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற மாணவர்கள் விருதுகளும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களை வழிப்படுத்திய குறித்த மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளின் அதிபர்களும்  பிரதே செயலாளரால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் விருதுகளும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை கௌரவப்படுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு  சிரேஷ்ட பிரஜைகளது சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






No comments:
Write comments