Wednesday, October 16, 2019

தென்னிலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய வெடிகுண்டு? பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!




மட்டக்குளி - முகத்துவாரம் பகுதிகளில் வெடிகுண்டு புரளி ஒன்று பரவியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென கூறும் பொலிஸார் வதந்திகளை நம்பவேண்டாமென மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இருந்தபோதிலும் குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களும் அங்கு குழுமியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்குளி பகுதியில் வாகனம் ஒன்று நீண்ட நேரம் சாரதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சந்தேகத்துக்கிடமான எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments