Tuesday, October 15, 2019

இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்படட வரிப்பத்தான்சேனை பொது நூலகத்தில் புத்தக கண்காட்சி.

R.M.பாயிஸ்

வரிப்பத்தான்சேனை நிருபர்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச செயலக  எல்லைக்குட்படட    வரிப்பத்தான்சேனை பொது நூலகத்தினால் "வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்" என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக கண்காட்சி வரிப்பத்தான்சேனை பொது நூலக மண்டபத்தில் இன்று (2019.10.15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் JK.றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர் அஹமட் அன்வர், பிரதேச சபை செயலாளர் L. இர்பான், நூலகர் ARM.இல்யாஸ்,சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் மௌலானா உட்பட மாணவர்கள்,சிறுவர்கள்,

பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



வாசிப்பு மனிதனை பூரணமாக்கி அவனின் சிந்தனையில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது.இச் சிந்தனை மாற்றத்தை உண்டு பண்ணுவது அழகிய புத்தகங்களே.எனவே புத்தகங்கள் மாணவர்களை கவரும் வகையிலும் அவர்களிடத்தில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கிலும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் நூலகத்தில் இதுவரை அங்கத்துவம் பெறாதவர்கள் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சலுகை கட்டணத்தில் ஒக்டோபர் மாதம் முழுவதும் ரூபா 70/= செலுத்தி அங்கத்துவம் பெறலாம்.

அனைத்து மாணவச் செல்வங்களும் தங்கள் அறிவுக் கண்களை திறக்க நூலகத்தை திறம்பட பயன்படுத்துங்கள் என்று வாழ்த்துகிறேன்.






No comments:
Write comments