Wednesday, October 30, 2019

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவு


காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக இறப்புச் சான்றிதழைப் பெற்ற குடும்பங்களுக்கு, இல்லாமல் போன சான்றிதழ்கள் கிடைக்காத பட்சத்திலும் அவர்களுக்கு உடனடியாக 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் (OMP), அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ‘காணாமல் போயுள்ள’ அல்லது ‘கடத்தப்பட்ட’ நபர்களுக்கு, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, இல்லாமல் போன சான்றிதழ் (COA) வழங்க பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, COA வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும், இந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கூட்டு அமைச்சரவை பத்திரத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மரணச்சான்றிதழ் பெற்றிருந்து, COA இதுவரை பெற்றிருக்காவிட்டாலும், அவர்களிற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விரைவில் COA பத்திரம் வழங்க முடிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments