Monday, October 21, 2019

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் 203 ஓட்டங்களால் இந்தியா முன்னிலை


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய ஆட்ட நேரமுடிவில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா  8 விக்கட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.
அந்த அணியின் Theunis de Bruyn 30 ஓட்டங்களுடனும் Anrich Nortje 5 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.
இதேவேளை தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கட்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்று கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
இதனடிப்படையில், இந்திய அணி 203 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments