Sunday, October 20, 2019

காங்கோ நாட்டில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 பயணிகள் பரிதாபமாக பலி!


காங்கோ நாட்டில் இன்று காலை லுஃபு என்ற இடத்தில் இருந்து பயணிகள் மற்றும் சரக்குகளுடன் பயணித்த பேருந்து பன்ஜா-குங்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் திடீரென விபத்திற்குள்ளானது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகீழாக கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் கூறுகையில் ‘‘பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் தீப்பிடித்து எரிந்ததில் மேலும் சிலர் இறந்திருக்கிலாம்’’ எனத் தெரிவித்தார்.
தலைநகர் கின்ஷானாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள பன்ஜா-குங்கு பகுதியில் அடிக்கடி பஸ் விபத்து ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Write comments