Sunday, October 27, 2019

அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் வெற்றி...


இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

அடிலெய்ட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோனர் ஆட்டமிழக்கமாமல் 100 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.


No comments:
Write comments