Sunday, September 29, 2019

மீகொட பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டு வந்த பெண் பொலிஸாரிடம் சிக்கினர்!

மீகொட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்க - வட்டருக்க பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 800 லீட்டர் சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 2 ஆயிரத்து 304 கோடாக்கள், 2 எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு, செப்பு தகரம், தண்ணீர் மோட்டார், சீனி 50 கிலோ கிராம் மற்றும் கருப்பட்டி 5 கிலோ கிராம் உள்ளிட்ட பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:
Write comments