Saturday, September 7, 2019

சாலிந்த திசாநாயக்கவின் வெற்றிடத்துக்கான வர்த்தமானி நாளை மறுதினம்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மறைந்த சாலிந்த திசாநாயக்கவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அரச வர்த்தமானி நாளை மறுதினம்  வௌியாகும் என தகவல்கள் வௌியாகியுள்ளன,
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் இடைவௌியை நிரப்ப  அனைத்து தகுதியும் உள்ள ஒருவரையே தேர்தல்கள் ஆணைக்குழு வர்தமானியில் பெயரிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.,
நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கான  பெயரை குருணாகல் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரியின் ஊடாக தேர்தல்கள்   ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திக்கூட்டமைப்பின் தேசிப் பட்டியல் பதவியிலிருந்து சாந்தபண்டார அண்மையில்  பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்கதக்து

No comments:
Write comments