Saturday, September 7, 2019

இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்


ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், அவரது வெளிநாட்டு பயணத்துக்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை  அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டனர்.

ஆனால், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் திகதி தொடக்கம் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments