Wednesday, September 18, 2019

முஸ்லிம்களை கண்காணிக்க வேண்டும், முஸ்லிம் விவாக சட்­டம் மிலேச்­சத்­த­ன­மானது - ஞான­சாரர்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்­களை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கோரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், அந்தத் திருத்­தங்­களை ஆத­ரிக்கும் அர­சியல் கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒன்­றி­ணைய முடியும் எனவும் விருப்பம் தெரி­வித்­துள்ளார்.

நுகே­கொடை ஆனந்த சம­ரகோன் திறந்த வெளி­ய­ரங்கில் நடை­பெற்ற பொது­பல சேனா அமைப்பின் முத­லா­வது இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘தாம் மக்­களின் மனித உரி­மை­களைப் பாது­காக்கும் அர­சி­யல்­வா­திகள் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விக்­கிறார். அப்­ப­டி­யென்றால் அவர்கள் 13 வயதுப் பெண் பிள்­ளை­களை வய­தா­ன­வர்­க­ளுக்கு திரு­மணம் செய்து கொடுக்கும் மிலேச்­சத்­த­ன­மான முஸ்லிம் விவாக சட்­டத்தை ஆத­ரிக்­கி­றார்கள் என்­பது தானே அர்த்தம். இல்லை அவர்­க­ளுக்கு நாட்டு மக்­களின் பிள்­ளை­க­ளது மனித உரி­மை­களை விடவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தங்கள் மடியில் விழும் முஸ்லிம் வாக்­கு­களைக் காப்­பாற்­றிக்­கொள்ள வேண்­டிய தேவை உள்­ளது.

முஸ்லிம் வாக்குக் குவி­யல்­களைப் பாது­காத்து தம­தாக்­கிக்­கொள்ள வேண்­டிய தேவைப்­பாடு ரணில் விக்­கி­ரம­சிங்க தரப்­பி­ன­ருக்கு இருக்­கி­றது. அத­னா­லேயே முஸ்லிம் தனியார் சட்­டத்தை அடுத்த பாரா­ளு­மன்றம் வரை தாம­தப்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்கள்.

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்­களை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்து சிங்­களப் பெரும்­பான்­மை­யி­ன­ரது 70 வீத­மான வாக்­கு­க­ளையும் அவர்­களால் பெற்­றுக்­கொள்ள முடியும். ஆனால் அவர்­க­ளுக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே பெறு­ம­தி­யா­ன­வை­யாகத் தெரி­கி­றது.

நாங்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குக் கூறு­கிறோம். பாரா­ளு­மன்றம் இன்னும் கலைக்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்­களை உட­ன­டி­யாகப் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பி­யுங்கள். அப்­போது அந்தத் திருத்­தங்­களை ஆத­ரித்து கையு­யர்த்தும் கட்­சிக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் எம்மால் ஒத்­து­ழைக்­கலாம். சட்டத் திருத்­தங்­களை எதிர்க்கும் கட்­சி­களை அர­சி­ய­லி­லி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்கு மக்­களை எம்மால் ஒன்று திரட்ட முடியும்.

நாங்கள் எந்­த­வொரு அர­சி­யல்­வா­திக்­கா­கவும் முன்­நிற்க வேண்­டிய தேவை­யில்லை. பௌத்தத்தைப் பாது­காக்கும் கலா­சாரம் மற்றும் மனித உரி­மை­களைப் பாது­காக்கும் நாட்டை முன்­னேற் றிச் செல்லும் அர­சியல் தலை­வ­ரு­டனே நாம் கைகோர்க்­க­வுள்ளோம்.

ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு முஸ்லிம் பெண்­களின் கறுப்பு உடை மற்றும் முகத்­திரை என்­ப­ன­வற்­றுக்கு சமூ­கத்தில் எதிர்ப்பு மேலோங்­கி­யது. ஆடைக்­க­லா­சா­ரத்தை மாற்ற வேண்டும் என முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்தும் கருத்­துகள் வெளி­வந்­தன. ஜனா­தி­ப­தியும் இந்த ஆடைக்கு தடை ஏற்­ப­டுத்­தினார். என்­றாலும் இந்த உத்­த­ர­வுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­னவா இல்­லையே. பிர­பா­கரன் கூறி­யது போன்று சிங்­க­ள­வர்கள் இரண்டு வாரங்­களில் அனைத்­தையும் மறந்து விடு­கி­றார்கள்.

சஹ்­ரானின் தாக்­கு­தல்­களின் பின்பு அர­சி­யல்­வா­திகள் நடை­முறைப் படுத்­து­வ­தாகக் கூறிய உத்­த­ர­வுகள் அனைத்­தையும் மக்கள் மறந்து விட்­டனர்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டுகள் இன்னும் முற்றுப் பெற­வில்லை. முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு இந்நாடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. எங்களுக்கு அருகில் வசிக்கும் அயலவர்களின் நடவடிக்கை களை நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு நாம் செயற்படா விட்டால் எமக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்தினைத் தவிர்க்க முடியாமல் போகும். மீண்டும் ஒரு ஏப்ரல் 21 போன்ற தாக்குதலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

No comments:
Write comments