Sunday, September 8, 2019

கிளிநொச்சியில் நேர்ந்த சோக சம்பவம் : 3 பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் டிப்பர் வாகனத்தின் சில்லில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் டிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் உரையாடிவிட்டு மீண்டும் இறங்கியுள்ள போது டிப்பர் வாகனத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முரசுமோட்டை - ஐயன்கோவிலடி பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments