Saturday, August 17, 2019

மனம் திறந்தார் M.L.Musmi Mps இறக்காமம் காபட்டும் தடைகளும்.இறக்காமத்தில் பல முடியாத காரியம்களை சாதனைகளாக சாதித்த வரலாறு எம்மவருக்கு உண்டு,சாதனைகளுக்கு உரிமை கோருவதில் நோக்கமாக கொள்ளாது சாதிப்பதற்காகவே பல நூறுபேர் ஒவ்வொரு விடயம்களிலும் கருத்தாக முன் நின்றார்கள்.

தற்காலத்தை பொறுத்தவரை சாதிப்பதற்கு முன்னமே சாதனைபடைத்த போலி பிரச்சாரம்களும்,தற்பெருமைகளும் ,காழ்ப்பணர்ச்சிகளும் இறக்காமத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை நோக்க காரணமாயிற்று.

அந்த வகையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரவூப்ஹக்கீம் சேர் அவர்களின் வாக்குறுதிக்கு அமைய இறக்காமம் மத்திய குழுவின் வேண்டுகோளிற்கு இணங்கவும் என்னுடைய இடைவிடாத தொடர்ச்சியான பின் நகர்த்தலாலும் ஒவ்வொரு படிமுறையான ஆவணசமர்ப்பித்தல் மூலம் அரசின் ஸ்திரத்தன்மையின்மையினால் ஏற்பட்ட பல இழுபறிக்கு மத்தியிலும் ஒருவாறாக காபட் வீதிக்கான நிதியினை கொண்டுவந்தேன்.

இந்த காபட் வீதிக்கான நிதி கிழக்கு மாகாண முதலைச்சின் செயலாளரால் விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான வேலைகளும் நிறைவுபெற்றது .இந்த காபட் நிதியை கொண்டுவந்தோம் என்று கூறிய போதும் அதுவரையும் முகநூலிலே காபட்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று மக்களை அன்று  குழப்பியவர்கள் இன்று காபட் வீதிக்காக போராடியவர்காளாக தாங்களை காட்ட முயல்வது வெட்கம் .காபட் வீதிக்காக அத்தனை முயற்சிகளையும் மிக சூசமாகவும்,வெளிப்படையாகவும் மேற்கொண்டிருந்தபோதும் என்னை பின்னுக்கு தள்ள வேண்டும் என்னுடைய முயற்சியை மலினப்படுத்தவேண்டும் என்று காழ்ப்புணர்ச்சிகாளால் கட்சியையும் அதன் செல்வாக்கையும் இங்கே வீழ்த்த வேண்டும் என்று அற்ப சுயநலம்களுக்காக உழைத்தவர்கள் இன்று காபட் வீதிக்காக போராடியவர்களாக முகநூலிலே தம்பட்டம் அடிக்கிறார்கள்,ஒவ்வொரு வட்டாரங்களிலும் தன்னுடைய அபிவிருத்தியை தாங்கமுடியாத இந்த சுயநல அரசியல்வாதிகள் குறிப்பாக இந்த சபையினுடைய பிரதி தவிசாளர் என்று சொல்லும் நபர் வீணாக காழ்ப்பணர்ச்சியின் வழியே உளறித்திரிகிறார்கள்,நான் பந்தம் வாங்கிக்கொண்டு இந்த வீதியை கொந்துராத்துக்காரரிடம் செப்பனிடவிட்டதாகவும் அன்று ஒரு பொய்யை சொன்னார்,தற்போது வீதியை தடுப்பதாகவும் அவருடைய பொய்யை அவரே மறுத்துரைக்கிறார்.

காசு வாங்கிக்கொண்டு வீதியை செப்பனிட சொன்ன நான் ஏன் தடுக்கவேண்டும் என்பதை சற்று மக்களுக்கு தெளிவுபடுத்துதல் சால சிறந்தது..யாவையும் அறிந்தவன் இறைவன் ஒருவன். எல்லாப் புகழும் இறைவனுக்கே..

அளவில்லா மகிழ்ச்சியோடு எனது ஊரிற்கும் அழகான பாதை வரப்போகிறது என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் ஆர்ப்பரித்த வேளை நான் அதற்காக மேற்கொண்ட பிரயத்தனம்கள்,அத்தனை முயற்சியும் வெற்றிபெறும் தருவாயில்...எனது தலைமையிலே கலைக்கப்ட்ட பிரதேச சபையின் செயலாளர் ,பிரதேச செயலாளர் ,பள்ளி நிர்வாகம்,ஆகியோரை அழைத்து சட்டவிரோத கட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்று பல கடிதம்கள் ,அழைப்புக்கள அத்தனையும் விடுக்கப்பட்டு இறுதியாக ஒருபாடாக பிரதேசசபை யின் மதில்களை அகற்றி சுற்றி இருந்த எனது உறவினர்களின்  பலத்த எதிர்ப்புகளை தாண்டியும் ஊரின் அபிருத்திக்காக நானே முன் நின்று வீதிக்கு ,சுற்றுவட்டத்திற்கு தடையான கடைகளை அகற்றினோம் ,அந்த சந்தர்ப்பத்தில் இந்த சபை உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை.telecom ,electric post ஆகியவற்றிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதியினை நானே காசோலை வரைந்ததை உரிய அதிகாரிகளுக்கு சமர்பித்து வேலைகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டேன்.

கொந்துராத்துக்காரரின் அசமந்தம் இழுத்தடிப்பு ,பிரதேச சபையின் கவனயீனம் ,தவிசாளர் ,உபதவிசாளர் இருவரும் காபட் வீதி க்கு பலத்த எதிர்ப்பை வெளிகாட்டினார்கள் மு.காங்கிரஸ் இந்த காபட் வீதியினால் பெயர் பெற்று விடும் முஸ்மி இதன் மூலம் பெயர் பெற்று விடுவான் என்று என்னுடைய அத்தனை முயற்சிக்கும் தடையாக இருந்தார்கள். 

இறைவன் என்னோடு இருந்தான் மக்கள் என்னோடு இருந்தார்கள்.
இந்த காபட் வீதியின் சுற்றுவட்டத்திற்கு எஞ்சியுள்ள கட்டடம்களை அகற்ற வேண்டும் என்று  நான் மிகக் கடுமையாக முன்நின்றேன்.இந்த சுற்றுவட்டத்திற்கு தடையாக உள்ள கட்டடம்களை அகற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக நான் ஒவ்வொரு முறையும் பேசிக்கொண்டே இருந்தேன் ,காரணம் இந்த வீதி இடைநடுவில் காபட் இடப்படாவிட்டாலும் இடத்தையாவது பெற்று பாரிய அழகான சுற்றுவட்டத்தை அமைக்கவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் மக்களின் தேவை அதுவே .இதற்காக உபதவிசாளரின் உறவுமுறை என்பதற்காக இந்த கட்டடம்களை அகற்றுவதிலும் ,காபட்டை நிறுத்தி ,சுற்றுவட்டம் தேவையில்லை எமக்கு வீதியே போதும் என்று அதுவும் இழுத்தடிக்த்து இடையில் கைவிட வைப்பதில் குறியாகவும் ,அதனால் முஸ்லீம் காங்கிரஸ் இங்கே செல்வாக்கு இழக்கவேண்டும் என்று கங்கனம் கட்டி தற்போது பெயர் வாங்குவதற்காக முகநூலில் தம்பட்டம் அடிக்கிறார்கள்.மக்களை மடையர்களாக ஆக்கவேண்டும் என்று நடித்து அரசியல் செய்கிறீர்கள் வெட்கம் இல்லாமல்.

தற்போது ஊர்மக்கள் அத்தனைபேரும் கிளன்று எழுந்து கட்டையை அகற்ற வேண்டும் என்று கொந்தளித்ததன் விளைவாக தங்களுடைய முயற்சி படுதோல்வியில் முடிந்ததால் காழ்ப்புணர்ச்சியில் உளறி திரிகிறார்கள்.இவர்களுடைய பொய்யான அரசியல் செயற்பாட்டினால் இவர்கள் தடம் தெரியாமல் போவார்கள் என்பது நிச்சயம். 

கனுவை கழற்ற வேண்டும் ,உரிய இடத்தில் நடவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன் ,தவிசாளர், உபதவிசாளர் அவர்களின் பகிரங்க தடைகள் இழுத்தடிப்பின் காரணமாக மட்டுமே இந்த காபட் வீதி இவ்வளவு தூரம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.,இந்த வீதியின் சரியான அளவிற்கு சுற்றுவட்டம் அமைக்கபட்டே ஆகவேண்டும் அதுவரை நான் ஓயப்போவதில்லை இதில் என்ன தடைகள் வந்தாலும் அதை தாண்டி இதற்காக முன்நிற்பேன்.அவர்களால் முடியும் என்றால் கனு (post)நடப்பட்ட இடத்திற்கு மேலதிக மாக வெளியில் உள்ள கட்டிடத்தை உடைக்க முடியுமா?கடந்த 18 மாதம்களாக இழுத்தடித்து வந்த்தை அறிந்த இந்த மக்கள் இவர்களுடைய தடைகளையையும் தாண்டி கிளர்ந்து எழுந்து பெரிய ஜூம்மா பள்ளிவாசலின் தலையீட்டால் செய்து முடிக்கப்பட்ட வேலைக்கு இவர்கள் தந்தையாக முயற்சி செய்வதில் இருந்து புரிகிறது இவர்களின் வங்குரோத்து அரசியல்...இவர்களின் இழுத்தடிப்பால் என்னால் கொண்டுவரப்பட்ட அதிநவீன மின் வெளிச்ச விளக்கும் தற்போது இழுபறி நிலையிலே காணப்படுகிறது.

இவர்களுடைய நோக்கம் இங்கே அபிவிருத்திகள் இடம்பெறக்கூடாது என்று வேதனைப்படும் கீழ்த்தரமான சிந்தனை.அபிவிருத்தி செய்வோம் வாருங்கள் காழ்ப்பணர்ச்சியின் வழியே மக்களிடையே பொய்களை பரப்பி ,முகநூலுக்கு அரசியல் செய்வதை விட்டு ஊரிற்கு சேவைசெய்வோம் வாரீர்....


No comments:
Write comments