Monday, August 19, 2019

இன மத பேதமின்றி அகில இலங்கைரீதியாக உதவி செய்கின்ற HRF



அகில இலங்கைரீதியாக இன மத பேதமின்றி வறிய மக்களுக்காக  பல சமூக சேவைகளை செய்து வருகின்ற மனிதாபிமான நிவாரணப் பணிக்கான அமைப்பு (HRF)  மக்களுடைய தேவைகளை அறிந்து தேடிச் சென்று உதவிகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் தமது அமைப்புக்கு சிங்கள சகோதரர் ஒருவரால் கொடுக்கப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டு கொழும்பு  கடுவல பகுதிக்க்கு விஜயம் செய்தனர்.

அங்கு வசித்துவருகின்ற சகோதர மொழியுடைய தாய் ஒருவர் அதாவது நநந்தாவதி வயது 61இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுஉள்ளார் அவருக்கு அவசராமாக இருதய சத்திர சிகிச்சை  பைப்பாஸ்  செய்த பணஉதவி  இல்லாததனை  அறிந்து அவர்கள் நேற்றைய தினம் தங்களது அமைப்பிநூடாக HRF தவிசாளர்,செயலாளர் மற்றும் பல உயர் பீட உறுப்பினர்களுடன் அங்கு சென்று அவரது பைப்பாஸ்  செய்வதற்கான பண உதவியினை  வழங்கியிருந்தார்கள்.

அல் ஹம்துலில்லா இந்தநாட்டில் இனமத வேறுபாடுகளை பார்க்கின்ற சமுதாயத்திற்க்கு  மத்தியில் இந்த HRF அமைப்பு செய்கின்ற இந்த சேவைக்காக அவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





No comments:
Write comments