Thursday, August 8, 2019

அஷ்ரப்பால் செதுக்கப்பட்ட ஹரிஸ் சரியான தலைமையை தேர்ந்தேடுக்கும் தெளிவான சந்தர்ப்பத்தை தவறவிடுவாரா.?



 ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்  

பாடசாலை பள்ளி மாணவனாக இருந்த காலம் தொடக்கம் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக
தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபினால் செதுக்கப்பட்ட ஹரிஸ் சரியான தலைமையினை மிகத்தெளிவான சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை கை நழுவி விடுவாரா.? என்ற கேள்வி அவர் அரசியல் தலைமை தாங்கும் கல்முனை தொகுதியிலும், அவருக்கு பரவலாக வாக்களிக்கும் அம்பாறைமாவட்ட மக்கள் மத்தியிலும் அலசப்படும் விடயமாக மாறியுள்ளது.

வட-கிழக்குகு முஸ்லிம்களின் உரிமைக்குரலாக பல சிரமங்களுக்கு மத்தியில் மர்ஹும் அஸ்ரப்பினால் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது கல்முனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசுடைய குடும்பமும், அவருடைய தகப்பானாரும் இஸ்தாபக தலைமைக்கு தோளோடுதோள் நின்று கைகொடுத்த விதமும், கட்சியின் வளர்ச்சியில் பங்காற்றிய விதமும் அழிக்க முடியாத முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் பல பக்கங்களை கொண்ட ஏடாகவே இருகின்றது.

இந்த நிலையில் இஸ்தாபக தலைமை அஸ்ரப்பினால் மிகவும் பக்குவாய் அரசியலுக்காக செதுக்கப்பட்ட ஹரிஸ் தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமையை இஸ்தாபக தலைமையின் மறைவிற்கு பின்னர் தலைமை பதவியில் உட்கார வைப்பதில் பெரும் பங்காற்றியவர் என்பது இன்றைய தலைமை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதாவில் ஆரம்பித்து பசீர் வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினை விட்டு ஓரங்கட்டும் அரசியல் சாணக்கியத்தில் வெற்றி கண்ட தற்போதைய தலைமை கடைசியாக பெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரப் சுவாசித்த மண்ணின் புதல்வன் ஹரிசை அரசியலில் இருந்து சீரோவாக்க வைக்க போகும் சூனியத்தில் இருந்து தப்பிக்க மிகச் சரியான தலைமை தேர்தெடுக்கும் தெளிவான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவே மூத்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினாலும், ஹரிசுடைய மண்வாசனையை சுவாசித்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினாலும் அலசப்படும் விடயமாக சூடு பிடித்துள்ளது.

கடைசியாக அஸ்ரப் சுவாசித்த மண்ணின் புதல்வனாக இருக்கும் ஹரிஸ் என்ற ஆளுமையின் முக்கியத்துவத்தினை இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக நன்கறிந்த அம்பாறை மாவட்ட மக்களின் ஒருமித்த கருத்துக்களும், சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை, கல்முனை வடக்கிற்கான பிரதேச செயலக தரமுயர்வு சம்பந்தப்பட்ட எல்லை நிர்ணைய விடயம் என்பவைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளது தற்போதைய தலைமை.

அந்த வகையில் கடைசியாக ஏறாவூரில் முன்னாள் தவிசாளர் தோழர் பசீரின் அரசியல் எவ்வாறு சூனியத்தின் மூலம் பூச்சியமாக்கப்பட்டதோ.! அவ்வாறே தனது சர்வதிகார போக்கிற்கும், தனியாக கட்சியினை வழி நடாத்தும் தனது அதிகார தலைமைதுவத்திற்கும் எதிராக ஓரளவேனும் இருந்தாற்போல் குரல் கொடுக்கும் ஹரிசின் அரசியலையும் பூச்சியமாக்குவதற்கான சூனியத்தின் மேற்கூறிய காரணங்கள் மூலப்பொருளாக பயண்படுதப்படுகின்றது என்பதே உண்மை.

இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் வைக்கப்படும் சூனியத்தின் ஓவ்வொரு முடிச்சுக்களையும் அகற்றி தனது அரசியலானது சமூகத்தில் பூச்சியத்தினை அடைவதில் இருந்தும் ஹரிஸ் தன்னை பாதுகாப்பதென்றால்.! சரியான தலைமையினை தேர்ந்தெடுக்க வேண்டிய தெளிவான நேரத்திற்கு வந்துள்ளார் என்பதே மர்ஹும் அஸ்ப்பினால் செதுக்கப்பட்ட அவருடைய பெரிய அரசியல் அறிவின் மூலமும், தற்போதைய தலைமையுடன் கடந்து வந்த அனுபவத்தின் மூலமும், தனது பிரதேசத்தின் உள்ள மக்கள் ஆதரவின் மூலமாகவும் கிடைத்துள்ள ஆயுதமாக தற்பொழுது அவருடைய கரங்களில் இருக்கின்றது.

No comments:
Write comments