Saturday, August 10, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் இல்லை.


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு
எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் இல்லை.

இதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பெரும்பாலானோர் தனது தரப்பிற்காகவே பணியாற்றினர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments:
Write comments