Monday, August 5, 2019

யாழ் பாசையூரில் புதிய வாள்வெட்டுக்குழு உதயம்! பொலிஸார் தீவிர தேடுதல்


யாழில் புதி­தாக வாள்­வெட்­டுக் குழு ஒன்று உரு­வா­கி­யுள்­ளதாகவும், அவர்களை பிடிப்­ப­தற்கு சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மற்­றும் பொலி­ஸார் இணைந்து தேடு­த­லில் ஈடு­பட்­டுள்­ள­தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அட்­டா­கா­சம் அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்­பா­ணம் பாசை­யூ­ரைத் தள­மா­கக்­கொண்டு தற்­போது புதிதாக ஒரு வாள்­வெட்­டுக் குழு உரு­வா­கி­யுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் கொழும்­புத்­து­றைச் சந்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் குரு­ந­கர் பகு­தி­யைச் சேர்ந்த இரு இளை­ஞர்­கள் மீது வாள்­வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள நிலையில், >வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கிய இரு இளை­ஞர்­க­ளும் யாழ் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலை­யில், குறித்த இளைஞர்களை தாக்கியமை தொடர்பில் பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­ய­போதே , பாசை­யூரில் புதைய வாள்வெட்டு குழு உருவாகியுள்ளதாக பொலிஸாருக்கு தக­வல் கிடைத்­துள்­ளது.
இதனையடுத்து யாழ் பொலி­ஸார் மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் இணைந்து பாசை­யூர் உட்­பட ஈச்­ச­மோட்டை பகு­தி­க­ளில் தேடு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­ தோடு, வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

No comments:
Write comments