Sunday, August 4, 2019

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ?


எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் அரசில் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்தவுடன் இந்த அரசியல் நிலை மேலும் சூடுபிடிக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படகூடுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்பினரும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான தரப்பினரும், ஒன்றினைந்து செயற்படவேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனின் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சினால் வெற்றிப்பெர முடியாது போகுமெனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் கூறியுள்ளார்.

No comments:
Write comments