Sunday, August 4, 2019

முஸ்லிம் தலைமைகளால் நிரம்பி வழிந்த கொழும்பு மாநாடு!



கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த ‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாடு’ நேற்று (4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் மிக சிறப்பாக நடைபெற்றது!

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம்,ரிஷாட் பதியுதீன்,ஹலீம், பிரதியமைச்சர்களான அமீரலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் உட்பட முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட உலமாக்கள்,ஹாபிஸ்கள் என ஆன்மீக தலைவர்களும் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள், புத்திஜீவிகள் என  பெருந்திரளானோர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

தடை செய்யப்பட்டுள்ள நிகாப்(பேஸ்கவர்) உள்ளிட்ட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பெரும்பாலான விடயங்கள் தொடர்பில் இந்த நிகழ்வின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

#ShareTheKhayr #நலவைசெயார்செய்யுங்கள் #ShareTheBest 

Www.Todayceylon.lk







No comments:
Write comments