Saturday, August 10, 2019

மட்டக்குளி காவல் நிலையத்தில் சந்தேக நபரொருவா் திடீா் மரணம்


மட்டக்குளி-கதிரான பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல் துறையில் வைத்து திடீர் என உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை திருடுவதற்காக வீடொன்றுக்குள் புகுந்த பொழுது, அங்கிருந்த பெண் ஒருவர் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் மூன்றாம் மாடியில் இருந்து கீழே குதித்த வேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் இன்று காலை 8.00 மணியளவில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்நிலையைில், பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Write comments