Friday, August 2, 2019

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் களமிறங்கவுள்ள தேரர்கள்.....!


அடிப்படை வாத தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்த நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதனை தவிர்த்து சஹ்ரானின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்களை கைது செய்வதனால் மாத்திரம் அடிப்படை வாதத்தை தடை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

No comments:
Write comments