Monday, August 19, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி இரந்த வெலியங்க நியமனம்



(றியாத் ஏ.மஜீத்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஹோமாகம தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி இரந்த வெலியங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை (18) ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் வைத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் மற்றும் திருமதி இரந்த வெலியங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரந்த வெலியங்க, தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் எமது நாட்டின் முதுகெழும்பான இளைஞர்களுக்கு சிறந்த திட்டங்களையும் வழிகாட்டல்களை வழங்கிய சிறந்த ஆளுமை மிக்கவர்.

இரந்த வெலியங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். தனது கடின உழைப்பு, விடாமுயற்சி, எல்லோரையும் மதிக்கக்கூடிய பண்பு, இளைஞர்களுடனும், மக்களுடனும் சகஜமாக பழகும் விதம், எல்லா அரசியல் தலைவர்கடனும் சிறந்த உறவைப் பேணும் வல்லமை என்பன இவரின் குறுகிய கால வளர்ச்சிக்கு உதவிய நற்பண்புகளாகும்.

No comments:
Write comments