Saturday, August 10, 2019

முதலாவதாக வேட்பாளரா? அல்லது கூட்டணியா? அடுத்த வாரம் தீர்மானம்..


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அடுத்த வாரம் கூடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்போது அது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு வந்து, அதனை பிரதமர் மற்றும் பிரதி தலைவருக்கும் அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

கூட்டணி இன்றி எவராலும் வெற்றிப்பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments