Sunday, August 4, 2019

அட்டாளைச்சேனை 03 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் " பாராட்டும் கௌரவிப்பும் " நிகழ்வு


அம்பாறை, அட்டாளைச்சேனை-03 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாராட்டும் கௌரவிப்பும் நிகழ்வு  அட்டாளைச்சேனை -03 கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ஹம்ஸா சனூஸ் தலைமையில் நேற்று இரவு  புதிதாக திறக்கப்பட்ட பல்தேவைக்கட்டிடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை மண்ணின் மகிந்தன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் மற்றும் அதிதிகளாக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சரீப், நஹீப் மற்றும் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மபாஸ், ஜாபீர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களுக்கு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 

ஊடகப்பிரிவு 





No comments:
Write comments