Sunday, July 21, 2019

ஐக்கிய தேசிய கட்சி எந்த கூட்டணி அமைத்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது


கூட்டணி எதுவாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்கால தேர்தல்கள் எதனையும் வெற்றிகொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை   கடந்த  ஆட்சியாளர்கள் நாட்டை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிவில் அமைப்புக்களுடன் கூட்டிணைவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தேர்தல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments