Sunday, July 28, 2019

காவல்துறையினரால் 219 பேர் அதிரடியாக கைது


மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 06 மணி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கைது நடவடிக்கைகளில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாதம் 05 ஆம் திகதியிலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில்  ஐயாயிரத்து 924 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments