Wednesday, July 24, 2019

சாய்ந்தமருது சபை ஆகஸ்ட் 13 இல் மலரும் !!




அஷ்ரப் ஏ சமட்.

சாய்ந்தமருதுாருக்கு தனியான பிரதேச சபை சம்பந்தமாக இன்று புதன் (24 ம் திதகி சாய்ந்தமருதுாா் பிரநிதிகள் கொழும்புக்கு வருகை தந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அலுவலக இல்லத்திலும் , அமைச்சா் பௌசி இல்லத்திலும் இரண்டு சந்திப்புக்களை நடைபெற்றன.

இச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் எச்.எம் ஹரீஸ், முன்னாள் பிரதியமைச்சா் மஹ்ருபும் கலந்து கொண்டனா் .

இங்கு கருத்து தெரிவித்த அனைத்து தலைவா்களும் கல்முனைப் மக்கள் பிரநிதியின் கருத்தையே முன்வைத்தனா்.

சாய்ந்தமருது ஊர் பிரநிதிகளுக்கும் எச்.எம் ஹரீசுக்கு இடையில் பிரதி வாதங்களும் இடம் பெற்றன. இறுதியில் எச்.எம் ஹரீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை தமிழ்- முஸ்லிம் பிரதேச செயலளாளா் பிரச்சினைக்கு பிரதமா் ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னா் தனக்கு தீா்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கெள்ளப்படுகின்றது. அப் பிரச்சினை முடிவுற்றதும் சாய்ந்தமருதுக்கு ஆகஸ்ட் 13ல் சாய்ந்தமருது தனியான பிரதேச சபை தீா்வு பெற்றுத் தருவதாகவும் எச்.எம் ஹரீஸ் உறுதியளித்தாா்.

அதுவரையும் காத்திருக்கும் படியும் அங்கு வருகை தந்திருந்த சாய்ந்தமருதுாா் பிரநிதிகளிடம் உறுதியளித்தாா்.

No comments:
Write comments