Sunday, July 28, 2019

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 10 பேர் கைச்சாத்து!




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை 

கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த நிலையில், அந்த பிரேரணையில் கையொப்பமிட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டுவதாக பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.
குற்றப் பிரேரணையில் இதுவரையில் 10 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .


ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைத் தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,


கடந்த வருடத்தின் இறுதியில் அரசியல் நெருக்கடி நிலைமைய தோற்றுவித்து நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கியமை, ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமை ஆகிய காரணங்களை மையப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கையை எடுத்தோம்.


ஆனால், இந்தக் குற்றப் பிரேரணைக்கு இதுவரையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்.

 இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் இந்தப் பிரேரணைக்கான ஆதரவை மிக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
Metro

No comments:
Write comments