Wednesday, June 19, 2019

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கரையொதுங்கிய சடலம்


அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ள இனந்தெரியாத சடலம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுமார் 60 வயதான நபரொருவரே இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ள நிலையில், அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Write comments