2015ம் ஆண்டு நல்லாட்சி எனும் தொனியில் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவுக்கு வாக்களித்தோம், எங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை தவிர வேறு எந்த காரணங்களும் தமிழர்களுக்கு இல்லை. ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் நாங்கள் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றோமா என்று எங்கள் மனதுகளை மீள வாசிப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்கான பணிகள், அதற்கான தீர்வுகள்

வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் இழந்த எமது பாரம்பரிய காணிகள் மற்றும் வசிப்பிட காணிப்பிரச்சினைகள்

அரசியல் மற்றும் இருப்புகளுக்கான தீர்வுகள்

எமது எதிர்கால சந்ததிகளின் தொழில் மற்றும் கல்வி பிரச்சினைகள்

மலையக தமிழர்களின் சம்பள பிரச்சினை மற்றும் வீட்டுப்பிரச்சினை

தொழில் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் ரீதியான முரண்பாடுகளுக்கான தீர்வு

வட மாகாண சபைக்கான முழு அதிகாரம், மற்றும் அதற்கான சரியான திட்டங்கள்

மேற்சொன்ன எவைக்குமே இந்த அரசு தீர்வு வழங்காமல் இன்னுமொரு தடவை நேரம் கேட்கின்றனர், இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ள கூடியது, குறைந்தபட்சம் எம்மால் முன்வைக்கப்படுகிற கோரிக்கைகளை ஏற்று அதில் கையெழுத்திட்டு உறுதி வழங்கும் சந்தர்ப்பத்திலே நாங்கள் வாக்குகளை வழங்குவோம் என உறுதி பூணுவோம், வழமைபோல ஏமாறிக்கோமாளிகளாக வாழ்வதிலிருந்து வேறுபட்டு எமது உரிமையை காக்க எமது வாக்கை பயன்படுத்துவோம்.

போ.கோணேஸ்வரன்