ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா மத்திய பள்ளிவாயல்  வீதியைச் சேர்ந்த  அப்துல் பரீத்- இஹ்ஸானா பரீத், இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் சட்டத்தரணியாக கொழும்பு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அண்மையில்  ( கடந்த  (08) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 இவர் கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம்  கலைப்பிரில் திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய சித்தியைப் பெற்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அங்கு சட்டமானி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்டார்.
இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் ( ஓய்வு பெற்ற ஆசிரியர் ) எஸ்.ரீ.கபூர் நிஸா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியுமாவர்.