விஜயரத்தினம் சரவணன்

தமிழ் மக்கள் பொதுஜனபெரமுனக் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்சவினை அறிவித்தமை தொடர்பில் கருத்துத் தரெிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இந்த யுத்தத்திலே பாதிக்கப்பட்டவள் என்பதற்கு அப்பால், அந்த யுத்தத்தின் பின்பு மீள்குடியேறிய காலத்திலேயும், யுத்த காலத்திலேயும் மக்களோடு சேர்ந்து வாழ்பவள் என்ற வகையில், இந்த கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அவர்களது ஆட்சி என்பது ஒரு அசுர ஆட்சி என்றுதான் நான் கூறிக்கொள்வேன்.

இந்த மக்களுக்கு இப்பொழுது ஒரு பயமாகவிருக்கின்றது.

வெள்ளைவான் கடத்தல், பிள்ளைகளைக் காணாமலாக்குதல், ஊடகவியலாளர்களைக் கடத்துதல், கப்பங் கேட்டல் போன்ற பல்வேறுவிதமான அநாகரீகமான வேலைகளை அரங்கேற்றியது இந்த கோத்தபாய ராஜபக்சவோடு இணைந்த அந்த மகிந்த குடும்பம், ராஜபக்ச குடும்பம். எனவே கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்து எனக்கு நன்கு தெரியும்.