இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்தின அவர்களின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது

இதனை நல்லாட்சி அரசு குறிப்பாக அமைச்சர் சஜித் பிரேமதாச,அமைச்சர்  மங்கள சமரவீர ஆகியோர் இணைந்தே செய்திருப்பதாகவும் குறிப்பிட்ட இராஜ் இதற்கு ஐ.தே.க முழு ஆதரவு தருவதாகவும் குறிப்பிட்டு மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிந்துள்ளார். கூரகல விகாரை சம்பந்தமாக தனது பேஸ்புக்கில் இட்ட பதிவின் விளைவே இந்த நீக்கம் என இராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு விகாராதிபதி சுமரணத்தின தேரர், பொதுபலசேனா முக்கியஸ்தர் ஞானசார தேரர் ஆகியோருடன் சிறப்பு நேர்காணல்களை செய்திருந்தார், இந்த வீடியோக்கள் சமூக வலையில் டிரெண்டிங் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.