சி.கணேஸ்வரன் - ஆய்வு செய்தி தொடர்பாளர்

கல்முனையில் தமிழ் தரப்பு ஏற்பாடு செய்த உண்ணாவிர போராட்டம் பௌத்த பிக்குகளினால் ஆரம்பித்து அவர்களாலேயே முடித்து வைக்கப்பட்டது, புலம்பெயர் தமிழ் அமைப்பக்களினால் உற்சாகமளிக்கப்பட்ட இந்த போராட்ட களத்திற்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தவர் சுமந்திரன் எம்.பி அவர்களை கூச்சலிட்டு கலைக்குமளவுக்கு இந்த களம் அமைந்திருந்து.

இந்த போராட்டகளம் யாருக்கு ஆதரவாக செயற்பட்டது, யாரால் முன்கொண்டு செல்லப்பட்டது என்பது தெளிவாக மக்களுக்கு விளங்கினாலும் கூட தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது முக்கிய விடயமாகும், தமிழர்களின் கோரிக்கை நியாயமற்றது என முஸ்லிம்களும் சத்தியாக்கிரகம் புரிந்தனர். எல்லைப்பிரச்சினை மாத்திரமே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைய காரணமாகும்.

இது இவ்வாறிருக்கையில் போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்கள் குளிர்பானம் அருந்திய புகைப்படங்கள் புலம்பெயர் தேசத்தவர்களிடம் சிக்கியுள்ளது, இதனை வெளியிடுவது ஆரோக்யமானதல்ல என்பதற்காக இதனை பேசுவதும் விமர்சிப்பதும் ஏற்புடயதல்ல, இங்கு எம்.பிக்களான வியாழேந்திரன், கோடீஸ்வரன் ஆகியோர் பல சவால்கள் விட்டனர், ஒருவர் பதவி விலகுவார் என்றார், இன்னுமொருவர் தமிழர்களுக்காக உயிர்நீப்பார் என்றனர். வழமைபோலவே தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் அரசியல் பிரமுகர்கள் தமிழர்களை ஏமாற்றும் படலமே அரங்கேறியுள்ளது.

இந்த போராட்ட களம் குறித்த முழுவிவபர கட்டுரை மற்றும் புகைப்படங்கள் எமது அடுத்த அச்சுப்பிரதியில் வெளியாகும்.