புதிய குரல் சிறப்பு செய்தியாளர் வி.சரணவணன்

கல்விக்கு கரங்கொடுப்போம் என்னும் செயற்றிட்டத்தில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் ஊடாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள ரவிகரனுடைய மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, 13.07.2019 இன்றைய நாள் இடம்பெற்றது.

இந்த கல்விக்கு கரங்கொடும்போம் என்னும் செயற்றிட்டமானது, புலம்பெயர்ந்து பிரித்தனியாவில் வசிக்கும் கந்தப்பிள்ளை திலீபன் என்பவரால், சிவசங்கர் சுபத்திரன் என்பவரின் நினைவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.