புதிய குரல் அட்டாளைச்சேனை நிருபர் சியாத்.எம்.இஸ்மாயில் 

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் 32 வருடங்கள்
சேவையாற்றி ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்
ஏ.எல்.எம்.மீராசாஹிபின் பணியைப் பாராட்டி கௌரவிக்கும் 'மறவா வரத்துக்கு
மங்கா புகழாரம் 'சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை அதிபர்
எம்.எச்.எம்.றஸ்மி தலைமையில்  பாடசாலை சாலிஹா மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்-ஷெய்க்
ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஓய்வுநிலை
ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி
கௌரவிக்கப்பட்டதையும் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.