இலங்கை அரசியலில் இன்று மாலை மாற்றங்கள் நிகழக்கூடும் என புதிய குரல் அரசியல் செய்தி பீடம் தெரிவித்துள்ளது, அந்த அடிப்படையில் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் முகப்புத்தகத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளனர்,
இன்று மாலை பாராளுமன்றத்தில் அரசுக்கெதிராக ஜே.வி.பி கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதில் சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை எடுக்கப்போகும் முடிவில்தான் அனைத்தும் தங்கியிருக்கிறது.