பாறுக் ஷிஹான்
பாதுகாப்பு விடையத்தில் சனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே  தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம்  மண்டூர்  கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகத்தின்  மாபெரும் கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கழகத்தின் தலைவர் செ.பார்த்தீபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருந்தன.

 பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில். 

இன்று ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கின்ற மரணதண்டனை விடயத்திற்கு சனாதிபதி அனுமதியளித்திருக்கிறார். அதேவேளை மரணதண்டனை இடம்பெறக்கூடாதென்று 12 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் சனாதிபதி  மரணதண்டனையை நிறைவேற்றியிருக்கக்கூடாதென்று ஒருசாராரும் இருக்கின்றபோது நீதித்துறை என்னதான் செய்யப்போகின்றது எனப்புரியவில்லை

மரணதண்டனை போதுமானதா அல்லது சீர்திருத்த தண்டனை தேவையா, ஆயுள்தண்டனையாகத்தான் அமையவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. சனாதிபதியின் இந்தப்பரீட்சையில் யார்வெல்லப்போகின்றார்கள்  என்ற நீதிமன்ற தீர்ப்பில்தான் இருக்கின்றது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை உடனடியாக பதவி விலக பணித்திருந்தார் இதன்பின் கட்டாய விடுப்பு கைதும் இடம்பெற்று சிறையிலடைக்கப்பட்டனர்.

கடந்தகாலத்தில் பாதுகாப்பில் காணப்பட்ட   பாரிய ஓட்டை காரணமாக மனித குண்டுவெடிப்பில் 250 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் யார் குற்றம்செய்திருக்கிறார் என்ற விடயம் தொடர்பாக சனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும்இசனாதிபதிக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.

இதனைத்தொடர்ந்து  பாராளுமன்ற தெரிவிக்குழுவிற்கு முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாங்கள் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாக சனாதிபதியிடம் எடுத்துக்கூறியிருக்கிறோம். பிரதமர்இபொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர்  பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்திற்கு கலந்துகொள்ளக்கூடாது என பலதடவை சனாதிபதி கூறியதன் காரணமாகவே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு விடயத்தில் சனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே  தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதானகாரணம். சனாதிபதி பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர், பிரதமர், பொலிஸ்மா அதிபர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லாது இடம்பெறும் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தொடரே நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதான காரணியாக கருதவேண்டியுள்ளது  என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக திருமதி. த.செல்வக்குமார் போரைதீவுபற்று பிரதேசசபை,  சீ. யோகேஸ்வரன் முன்னாள் தவிசாளர் போரைதீவுபற்று பிரதேசசபை , ஏ.ஏ.ஏ. டயஸ் வெல்லாவெளி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்