புதிய குரல் கல்முனை செய்தியாளர் 

ஒருவாரத்தில் கணக்காளர் நியமிக்கப்படுவார் என அமைச்சர்  மனோ கணேசன் கூறினார் இதுவரை கணக்காளருமில்லை, தனி செயலகமும் இல்லை என உண்ணாவிரத போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த போராட்ட களத்திற்கு வருகை தந்த அமைச்சர் மனோ கணேசன்  பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார், அவற்றில் ஒன்றும் இன்னும் நடந்தபாடில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேண்டுமென்று மக்களை சூடேற்ற இவ் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்ற வேண்டாம் என கல்முனை தமிழ் சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்முனையில் தேரர் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகள் சிலர் உண்ணாவிர போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர், இந்த இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எம்.ஏ சுமந்திரன் எம்.பியை போராட்ட காரர்கள் மோசமாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.