புதிய குரல் அலுவலக செய்தியாளர் குருபரன்

கல்முனை உபசெயலகத்தை தரமுயர்த்த பிரதமர் ரணில் எழுத்து மூலம் சம்மதம் தெரிவித்துள்ளார், தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனிச்செயலகம் தமிழர்கள் கேட்ட எல்லைக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த வாக்குறுதிக்கு பிறகே ரணிலுக்கு அதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கியதாக அதன் முக்கயஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கல்முனையில் பட்டாசு வெடித்து தமிழர்கள் கொண்டாடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க பிரித்தால் நாங்கள் சொல்வது போல பிரிக்க வேண்டும் என்று சொல்லிய ஹரீஸ் எம்.பியும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். அப்படியானால் தமிழர்கள் கேட்ட எல்லைக்கு ஹரீஸ் எம்.பியும் சம்மதம் அளிக்கிறாரா என சமூக வலைத்தளங்களில் கல்முனை முஸ்லிம்கள் எழுதுவதை காணமுடிகிறது. எது எவ்வாறு இருப்பினும் த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன் அவர்களோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என அடிக்கடி ஹரீஸ் எம்.பி கூறி வருகின்றமை பாராட்ட வேண்டியுள்ளது.

இதற்கிடையில் இந்த அரசு எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கே கதிரையில் அமர்ந்திருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபகஷ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.