இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இரண்டாக பிளவுபட வாய்ப்பிருப்பதாக புதிய குரல் அரசியல் புலனாய்வு செய்தி பிரிவு தெரிவித்துள்ளது,

அந்த அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அதிதீவிர விசுவாசியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு பக்கம் தலைவராகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ பக்கம் முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் நிலை தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் தலைவராகவும் மிளிரவுள்ளனர், மஹிந்த ராஜபஷ முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் கூட்டணி (பசீர் சேகுதவூத்-ஹசனலி கூட்டு) உள்ளிட்ட பல முஸ்லிம் பிரமுகர்களை தம் வசம் சேர்த்து அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு நிறுத்தப்போகும் வேட்பாளருக்கு மேற்சொன்ன முஸ்லிம் பிரதிநிதிகள் ஆதரவளிப்பதோடு சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடம் ஏறவுள்ளதாக இலங்கையை அவதானிக்கும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகிறது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கயஸ்தர்கள் பலரும் மஹிந்த பக்கம் இறுதிக்கட்டத்தில் கைகோர்ப்பர் என பொதுஜன பெரமுன சூட்சுமமாக கூறியுள்ளது, ஏலவே விாயழேந்திரன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபடுமாயின் அடுத்த முஸ்லிம் பெரும்பான்மை கட்சியாக றிசாத் பதீயுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் மத்தியில் பிரபலம் பெறுவதோடு அதிக உறுப்பினர்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, றிசாத் பதீயுதீன் அவர்களுடன் பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் பசில் ராஜபஷ கொண்டுள்ள உறவின் மூலம் அவரையும் மஹிந்த பக்கம் இறுதியில் இழுக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.