திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 #இலங்கை தமிழ் அகதிகள் முகாம்கள் உள்ளன. இம்முகாம்களில் வசிக்கும்100க்கும் மேற்பட்ட #அகதிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் இந்திய குடியுரிமை கேட்டு மனு அளித்துள்ளனர்.
“இந்தியாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகி விட்டது. 3-வது தலைமுறை பிள்ளைகளும் வந்து விட்டனர். இதுவரை எங்களுக்கான எந்த ஒரு நிரந்தரமான தீர்வு அரசால் ஏற்படுத்தவில்லை. கல்லூரி நிறைவு செய்து இருந்தாலும் எங்களது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே எங்களது வாழ்வாதாரம் குறித்தும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விக்குறியாக உள்ளது. எங்களுக்கு இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.