காங்கேசன்துறை கடற்பரப்பில் புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு உட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த சிப்பாய்களினால் காங்கேசன்துறை துறைமுக வளவில் இதுவரையில் இல்லாத பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறை கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது.

 கடற்வளத் திற்கான பல்வேறு அத்தியாவசிய பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு வடக்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்” என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.