முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவிகளை துறந்திருக்கும் நிலையில் இதுவரை எவரும் பதவிகளை மீள பெற எண்ணவில்லை குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து செயற்படுவதை காணமுடிகிறது ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களான அமைச்சர் ஹலீம், அமைச்சர் கபீர் ஆகியோர் பதவிகளை மீள பெற்றுக்கொண்டனர். இதிலிருந்து முஸ்லிம் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

எதிர்வரும் தேர்தல் காலங்களில் எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது, எப்படி எதிர்கொண்டாலும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் குறைந்தே செல்லும், ஆனால் இந்த கூட்டு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முன்னேற்றம் அளிக்கும் ஒன்றாகும் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரசை விட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் ஆதரவு மிகவும் பேசுபொருளாக அமையும், மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் எம்.பி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பியை விட கிராக்கியுள்ளவராக கருதப்படுவார்.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கோட்டை, பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் இருப்பை தக்கவைக்கும் ஓர் மாவட்டம், கடந்த பாராளுமன்ற தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக பணிபுரிந்து இறுதியில் அ.இ.ம.க ஒரு எம்பியை கூட பெறவில்லை, கடந்த தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்திலேதான் தேர்தல்களில் களமிறங்கியது, அதனால் மக்கள் மரச்சின்னத்தை மறந்து போய் உள்ளனர், எதிர்வரும் தேர்தல்களிலும் யானைச்சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கும், இதனால் முஸ்லிம் காங்கிரசின் மார்கடிங் ஸ்டெடஜி மிகவும் பின்தங்கியே செல்லும், ஆனால் மயில் சின்னமும் அ.இ.ம.கா. கட்சியும் உயரவே செல்லும், முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க வுடன் இணைந்து பெற்ற மூன்று எம்.பிக்களையும் அடுத்த தேர்தல்களில் பெறுவது மிகவும் கடினம் ஒன்றில் இரண்டு எம்.பி அல்லது ஒரு எம்.பி மாத்திரமே பெறவாய்ப்புள்ளது, ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டாயம் ஒரு எம்.பி யினை பெற அதிக வாய்ப்புள்ளது.

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக ஒருபோதும் ரணில் விக்ரமசிங்க விரும்பமாட்டார், அதுவுமும் தனிச்சின்னத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு தேர்தல் கேட்க விரும்பமாட்டார், அப்படியிருப்பின் யானைச்சின்னத்திலே கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்கும், இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு செய்த காரியங்களுக்கு முஸ்லிம்கள் யானைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்களா? என்பது கேள்விக்குறி.

இது ஒருபுறமிருக்க அடுத்து இடம்பெற போவது ஜனாதிபதி தேர்தல், இதில் முஸ்லிம் கூட்டமைப்பினர் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்கப்போகிறார்கள், எந்த தரப்பு முஸ்லிம்களுக்கு விடிவு பெற்றுத்தந்துள்ளது? என்ற கேள்வி ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இருக்கிறது,

பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும், எல்லாமே அரசியல்!