புதிய குரல் அலுவலக செய்தியாளர்

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் அதிக செயற்பாடுகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக இருக்காது என மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார், 

இன்று மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் அம்பாறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஒரு மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் அவசியமோ அவைகளை அடிப்படை உரிமைகள் எனலாம், அவற்றும் உணவு நீர், உறைவிடம் மற்றும் மதசுதந்திரம் என்பவை உள்ளடக்கப்படும். வாழும் இடத்தில் மனிதன் தன் சுதந்திரம் பறிக்கப்பட்டால் அல்லது மேற்சொன்ன விடயங்கள் சூறையாடப்பட்டால் அதனை மனித உரிமை மீறல் எனலாம், அப்படியான மனித உரிமை மீறும் சம்பவங்கள் இலங்கை  முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மதஸ்தலங்கள் தாக்கப்படுதல், வியாபார ஸ்தானங்கள் தாக்கப்படுதல், மத அடிப்படையிலான ஆடைகளுக்கு தடை விதிப்பு, ஏனைய மதத்தை பின்பற்றும் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுதல், என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து மனித உரிமகள் ஆணையகம், ஹியுமன் றைட்ஸ் வொச், உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இவைகள் நிறுத்தப்படுவதாக இல்லை. இந்த செயற்பாடுகளை எமது பேரவை கண்டிக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் விசம பிரச்சாரங்கள் அச் சமூகத்தின் உரிமகளை பறிப்பதை எமது பேரவை ஏற்பதில்லை, இதற்கான உடனடி தீர்வை அரச அதிபர் எடுக்க வேண்டும். மத அடிப்படையிலான ஆடை விடயத்திற்காக உரிய தீர்வு உடன் எடுக்கப்படவேண்டும், கடும்போக்குவாத மத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். அவ்வமைப்புகள் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும், மனித உரிமைகள் பாதுாகாக்கப்பட்டு நீதி பேணப்பட வேண்டும். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேரவயின் அம்மபாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர், மாகாண பணிப்பாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிப், மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பாளர் விவேகானந்தரைாஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.