இலங்கை அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமையாக இலங்கைப்பணிப் பெண்களை அனுப்பவதை நிறுத்து வேண்டும்.
மத்திய கிழக்கிற்கு  வீட்டுவேலைக்காக பணிப்பெண்களை அனுப்புகிற நாடுகளுள் இலங்கை முக்கிய பங்கினை வகிக்கிறது. இது ஒரு வர்த்தகமாகவே கருதப்படவேண்டியது காரணம் நமது பெண்களை இன்னுமொரு நாட்டிற்கு அடிமையாக அனுப்புகின்ற மறுவடிவமே வீட்டுப்பணிப்பெண் என்ற நாமம்.
1980 களில் உக்கிரமாக ஆரம்பித்த இந்த வர்த்தகம், இலங்கைப்பெண்களின் திறனையும் நம்பிக்கையினையும், ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத் தன்மையினையும் அடிப்படையாக வைத்து இன்று லட்சங்கள் கொடுத்து பணிக்கு எடுக்கிற நிலைமைக்கு இந்த வர்த்தகம் வந்துள்ளது.
இதில் பணிப்பெண்களை பார்ப்பதிலும் அனுப்புகின்ற தரகர் நிறுவனங்களே அதிகம் இலாபம் ஈட்டுகிறது.  இந்த இரட்டிப்பு இலாபமே இவர்களை தவறுகள் செய்வதற்கும் துாண்டுகிறது.
இப்பொழுது ஒரு பணிப்பெண்ணுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் செல்வந்தர்கள் 4-6 இலட்சங்கள் வழங்குறார்கள் . இதில் 10 வீதமான பணமே உரிய பணிப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. ஊரிலிருந்து அழைத்து வரப்படுவதிலிருந்து விமானம் ஏறுகின்ற வரைக்கும் அனைத்து செலவுகளையும் தரகர்களே பார்த்துக்கொள்கின்றனர்.
இதற்கிடையில் துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள், பணமோசடிகள், சட்ட மோசடிகள் என்று அதிகப்பட்ட அநியாயங்கள் நடக்கிறது, நடப்பதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இவைகள் அரசுக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். இலங்கைக்கு ஒரு பெண் மூலமாக பல இலட்சம் ரூபாய் அன்னியசெலாவணி ஈட்டிக்கொள்கிறது. இவ்வளவு நாளும் மௌனியாக இருந்து வந்த அரசாங்கம் இப்போது திடீரென ஏன் போர்க்கொடிதுாக்கியுள்ளது? இதற்கான காரணம் என்ன?  காரணம். நல்லாட்சி அரசு ஆட்சியில் இருக்கிறது இந்த அரசில் எந்தவித ஊழல்கள் மோசடிகள் இடம்பெறவில்லை என்பதனை நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கு இந்த போர்க்கொடியும் ஒரு வழிமூலமே. அப்படியிருந்தால் சட்டபூர்வமாக அதனை நிறுத்துங்கள்!
இவைகள் ஒரு புறமிருக்க அங்கு சென்ற பெண்கள்  தங்களின் குடும்ப வருமானத்திற்காக உடலாலும் மனதாலும் பாரிய வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாட்டிற்கு வரமுடியாமல் அங்கு தவித்துக்கொண்டிருக்கின்ற சந்தர்பத்தில்தான் பல குற்றச்செயல்கள் இடம்பெறுகிறது. குறிப்பாக துன்புறுத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பணிப்பெண்களும் ஏதாவது செய்வதற்கு எண்ணி குற்றம் செய்கின்றனர்.
சிறுகுற்றங்களும் பாரிய குற்றங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பார்க்கப்படுகிறது. காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் சரீஆ (இஸ்லாமிய) சட்டம் அமுலில் உள்ளது.
களவு செய்து நிரூபணமானால் கைவெட்டுதல், விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொலை
(செய்தல்) போன்ற தவிர்க்க முடியாத தப்ப முடியாத இஸ்லாமிய தீர்ப்பு முறைகள். இதில் அந்நாட்டு அரபிகளே முக்கியஸ்தர்காளக இருக்கின்ற காரணத்தினால் அந்நாட்டு முதலாளித்துவவாதிகளுக்கு சார்பாகவும் தீர்ப்புக்கள் அமைந்துவிடுகின்றது. இது தவிர்க்கமுடியாத ஒன்று.
இலங்கை போன்று ஜனநாயக ஆட்சி அங்கு நடைபெறவில்லை, மாறாக மன்னராட்சி இடம்பெறுகிறது.  இஸ்லாமிய அரசாட்சி நடைபெறுகின்ற காரணத்தினால் தீர்ப்புகளுக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதில் றிசானாவின் மரணம் தகுந்த உதாரணம். இது ஒன்று மாத்திரமல்ல பல குற்றங்களுக்கு இன்னும் பாரிய தண்டனைகளை இலங்கையர்கள் அங்கு அனுபவிக்கின்றனர். இவற்றுக்கெதிராக ஒன்று உலநாடுகள் ஒன்றுபட்டபோதும் அவர்களின் சட்டத் தீர்ப்பினை மீள்பரிசீலணை செய்ய முடியாத  நிலை ஏற்பட்டது. இது இப்போதல்ல எப்பாழுதும் இடம்பெறும். நாங்கள் அடிமைகளை அனுப்பினால் இது தொடரும்.
இதில் தப்பிக்க அல்லது மீள்விசாரணை இல்லாத போது இலங்கைபோன்ற நாடுகள் எமது நாட்டுப்பெண்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பாமல் இருப்பதே சிறந்தது.