அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும் நான் ஈழத்தை பெற்றுத்தருவேன் என மேடையேறி பேசிய மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் வழித்தோன்றலில் வந்தவன் நான் என ஹரீஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார், மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹரீஸ் எம்.பி ,

தமிழ் முஸ்லிம் உறவு என்பது வரலாறு நெடுகிலும் இருந்துவந்துள்ளது. இதனை சீர்குலைக்க பல சக்திகள் முனைகிறது அதில் ஒன்றுதான் கல்முனை உப செயலக விவகாரம், தமிழ் முஸ்லிம் மக்கள் இருந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒன்றை பிக்குகள் வந்து தீர்க்க முயலுவது சிங்கள தேசியம் தமிழர்களை ஆள வழிவகுக்கும் இதனை ஒருபோதும் நாங்கள் விட்டு கொடுக்க கூடாது.

கல்முனை மாத்திரமல்ல, முழு வடக்கு கிழக்கிலும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை உண்டாக நாம் பாடுபடவேண்டும், தமிழ் பேசும் எங்கள் உறவுதான் எங்கள் வெற்றி என்றார்.